Pages

SLDTSL

Sunday, November 13, 2016

கைதடி நவில்ட் பாடசாலை மாணவர்களின்

வடமாகாண சபையைச் சேர்ந்தவர்களே உங்களிற்கு கைதடி நவில்ட் பாடசாலை மாணவர்களின் வேண்டுகோள்!
அண்மையில் வட மாகாணசபையால் ஒழுங்கு செய்யப்பட்ட மாற்றுத்திறணாளிகளிற்கான கருத்தமர்வு ஒன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இதிலே வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் அவர்களும் கைதடி நவில்ட் பாடசாலையின் (அடாத்தான)தான்தோன்றித்தனமான சிங்களஅதிபர் வாசுகி (நங்கியும் )பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இதிலே மாணவர்களால் பாரிய குற்றச்சாட்டு ஒன்றை மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் அதிபரிற்கு எதிராக முன்வைத்தனர் அதாவது தமிழ் சைகை மொழியை மாற்றி சிங்கள சைகை மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
உடனே அதிபரால் அது சரியான தீர்மாணம்தான் என்று கூறப்பட்ட போது இது வரையும் அதிபரின் பிழைகளை சகித்துவந்த உப அதிபர் கோபாலகிருஸ்ணன் அவர்கள் இல்லை அப்படி செய்ய முடியாது என்று அதிபரிற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளார். நன்றி திரு கோபாலகிருஸ்ணன் அவர்களே இனியும் நீங்கள் பொறுமைகாத்தால் உங்களை நீக்கிவிட்டு சிங்கள உப அதிபர் வருவார் அப்போது மணவர்களால் உங்கள் பக்கம் நிக்க முடியாது.
எனவே வட மாகாணசபை உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்து சிங்கள சைகை மொழியை வட பகுதிக்குள் புகுத்த இடமழிக்க வேண்டாம் அத்துடன் எமக்கு வேண்டாத அதிபரையும் மாற்றித்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.